Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வலுவடைந்து வரும் மலேசிய ரிங்கிட்

மலேசிய ரிங்கிட்டுடன் ஒப்புநோக்க சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு குறைந்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: மலேசிய ரிங்கிட்டுடன் ஒப்புநோக்க சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு குறைந்திருக்கிறது.

14 மாத காலத்தில், மலேசிய நாணயத்தின் மதிப்பு ஆக அதிகமாய் உயர்ந்துள்ளது.

புளூம்பர்க் நிறுவனப் புள்ளிவிவரப்படி, இன்று காலை பின்னேரத்தில், ரிங்கிட்டின் மதிப்பு ஒரு வெள்ளிக்கு 2.9998 ஆக இருந்தது.

பிற்பகலில் அது 2.9976 ஆக இருந்தது.

ஆனால் மாலை கிட்டத்தட்ட 4 மணிக்குள், ரிங்கிட்டின் மதிப்பு ஒரு வெள்ளிக்கு 3 ரிங்கிட் என்னும் நிலையை எட்டியது.

வலுவான ஏற்றுமதியைத் தொடர்ந்து, மலேசியப் பொருளில் மேம்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மீண்டு வருகிறது.
இந்தக் காரணங்களால், ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்துவருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்