Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைவாக இருக்கும் (வீடியோ)

உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சில காலத்துக்குக் குறைவாகவே இருக்கும். உலக எரிசக்தி மன்றத்தின் தலைமைச் செயலாளர் திரு. Christoph Frei அந்த முன்னுரைப்பை வெளியிட்டார்.

வாசிப்புநேரம் -

உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சில காலத்துக்குக் குறைவாகவே இருக்கும். உலக எரிசக்தி மன்றத்தின் தலைமைச் செயலாளர் திரு. Christoph Frei அந்த முன்னுரைப்பை வெளியிட்டார்.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, கடந்த ஜனவரி மாதம் 30 டாலருக்கும் கீழே இறங்கியது. இந்த வாரம் அது சுமார் 40 டாலருக்கு உயர்ந்தது. அந்த விலை உயர்வு, தற்காலிகமானதே எனச் சில தரப்பினர் கூறிவருகின்றனர்.

தேவையைக் காட்டிலும் கூடுதலான எண்ணெய் சந்தைக்கு வருவதே அதற்குக் காரணம். ஒன்றரை ஆண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு, கச்சா எண்ணெய் விலை உயருமென யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார் திரு. ஃபிரை.

கச்சா எண்ணெய் மட்டுமல்ல, இயற்கை எரிவாயுக்கும் அதே நிலைதான் என்றார் அவர். உலகப் பொருளியலும், எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான வளர்ச்சியே கண்டு வருகிறது.
சேமிப்புக் கிடங்குகளிலும் முழுக் கொள்ளளவுக்கு எண்ணெய் உள்ளது. ஆகவே, இந்த ஆண்டு முழுமைக்கும் கச்சா எண்ணெயின் விலை, 40 டாலரில் இருந்து 60 டாலருக்குள் இருக்குமென திரு. ஃபிரை முன்னுரைத்தார்.

உலக எரிசக்தி மன்றம் நேற்று வெளியிட்ட தனது ஆண்டு அறிக்கையில், எரிசக்தித் தொழில்துறை, கணிசமாய் மாற்றமடைந்து வருவதாகக் குறிப்பிட்டது. வர்த்தக முறை, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் என எல்லா முனைகளிலும் புத்தாக்கம் தேவையென்று அது வலியுறுத்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்