Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிதி நிறுவனங்கள் நிதிகளை வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்ச்சி

சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு  நிதி நிறுவனங்கள் நிதிகளை வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்தவிருப்பதாகச் சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் நிதிகளை வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்தவிருப்பதாகச் சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்திருக்கிறது.

தற்போது, Hong Leong Finance, Sing Investments, Finance and Singapore Finance ஆகிய நிறுவனங்கள் வைப்புத் தொகைகள், கடன்கள் ஆகியவற்றை எடுக்க, நாணய வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் ஆற்றலை அதிகரிகரிக்க அந்நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதாக நாணய வாரியம் கூறியது.
அடைமானமில்லா கடன்களுக்கான மொத்த வரம்பு, நிறுவனத்தின் மூலதன நிதியின் 25 விழுக்காடு வரை உயர்த்தப்படுகிறது. இதற்கு முன் , அந்த விகிதம் 10 விழுக்காடாக இருந்தது.
தனி கடனாளிகளுக்கான மொத்த வரம்பு நிறுவனத்தின் மூலதன நிதியின் அரைவிழுக்காடு வரை உயர்த்தப்படுகிறது. தற்போது அதற்கான வரம்பு ஐயாயிரம் வெள்ளி.

குறுகியகால தேவைகளுக்கு அடைமானமில்லா கடன்களைச் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நாடுகின்றன. அதனால் அத்தகைய நிறுவனங்களின் தேவைகளை நிதி நிறுவனங்கள் நிறைவேற்ற புதிய மாற்றங்கள் வழிவகுக்கும் என்று நாணய வாரியம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்