Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தும் அமெரிக்க மத்திய வங்கி

 அதிகரித்துவரும் பணவீக்கத்துக்கு மத்தியில், அமெரிக்க மத்திய வங்கி, அதன் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு

வாசிப்புநேரம் -

அதிகரித்துவரும் பணவீக்கத்துக்கு மத்தியில், அமெரிக்க மத்திய வங்கி, அதன் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு உயர்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து வட்டி விகிதம் இதுவரை இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டில், வட்டி விகிதம் மூன்றாவது முறையாக உயர்வு கண்டுள்ளது.

வர்த்தகங்களுக்கான வரிகளைக் குறைக்கப்போவதாகவும் நாட்டின் உள்ளமைப்புக்காக அதிகம் செலவு செய்யவிருப்பதாகவும் திரு டிரம்ப் முன்னர் கூறியிருந்தார்.

ஆயினும் திரு டிரம்ப்பின் கொள்கைகள் பொருளியலை எப்படி பாதிக்கும் என்பது குறித்து வங்கியியல் வல்லுநர்கள் இன்னும் கலந்துரையாடவில்லை என்று மத்திய வங்கித் தலைவர் ஜேனட் யெல்லன் (Janet Yellen) கூறினார்.

அத்துடன், மத்திய வங்கி அடுத்து எப்போது வட்டி விகிதத்தை உயர்த்தும் என்பது குறித்த அறிகுறி ஏதும் வெளியிடப்படவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்