Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஓட்டுநரில்லாக் கார் : வரும் ஜூலையில் பைடு நிறுவனம் அறிமுகம்

சீனாவின் தேடல் இணையத்தளமான  ‘பைடு’ (Baidu ) நிறுவனம், ஆளில்லாக் காரை, கட்டுப்பாடுகள் உள்ள சுற்றுச்சூழலில் வரும் ஜூலை மாதம் அறிமுகம் செய்யவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

சீனாவின் தேடல் இணையத்தளமான  ‘பைடு’ (Baidu ) நிறுவனம், ஆளில்லாக் காரை, கட்டுப்பாடுகள் உள்ள சுற்றுச்சூழலில் வரும் ஜூலை மாதம் அறிமுகம் செய்யவிருக்கிறது. காரை நெடுஞ்சாலைகளிலும் திறந்த நகரச் சாலைகளிலும் 2020ஆம் ஆண்டுக்குள் நிறுவனம் அறிமுகம் செய்யும்.

அப்போலோ என்பது திட்டத்தின் பெயர் என்று ‘பைடு’ தெரிவித்தது. அதன் தொடர்பில் வாகனங்கள், உணர்கருவி மற்றும் இதர பாகங்களை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படப் போவதாக 'பைடு’ கூறியது.  

வருங்காலத்தில் கார்கள், ஓட்டுநர்களின்றி இயங்கும் திறனைப் பெற்றிருக்கும் என்று தொழில்நுட்ப, வாகனத்துறைத் தலைவர்கள் கூறினர். கார்த் தாயரிப்பு நிறுவனங்களுடன், ஆல்ஃபபெட்டின் கூகுள் நிறுவனமும் கார் பாகங்களை வழங்கும் டெல்ஃபி நிறுவனமும், அந்தப் புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்