Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

எண்ணெய் விலை குறைந்தாலும் விமான கட்டணங்கள் குறையாதது ஏன்?

எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளாகக் குறைந்து வந்தாலும் விமான எரிபொருள் தொடர்பில் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை என்று பயணிகள் குறைகூறி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
எண்ணெய் விலை குறைந்தாலும் விமான கட்டணங்கள் குறையாதது ஏன்?

(படம்: Bloomberg)

சிங்கப்பூர்: எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளாகக் குறைந்து வந்தாலும் விமான எரிபொருள் தொடர்பில் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை என்று பயணிகள் குறைகூறி வருகின்றனர். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு எண்ணெய் விலைக அதிகரித்தபோது எரிபொருள் தொடர்பான கூடுதல் கட்டணங்கள் உடனடியாக அதிகரித்ததை அவர்கள் சுட்டினர்.

எண்ணெய் தொடர்பான கட்டணங்கள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் விலை மீண்டும் உயரும் என்று நிறுவனங்கள் எதிர்பார்ப்பதே காரணம் என்று தெரிகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Emirates, Garuda Indonesia, ஆகிய விமான நிறுவனங்கள், எரிபொருள் தொடர்பான கூடுதல் கட்டணங்களை குறைக்கவில்லை. Cathay Pacific, Qantas, Air Asia, Firefly, Malindo ஆகியவை, அந்த கட்டணங்களைக் குறைத்துள்ளன.

எண்ணெய் விலை குறைவால் பயண டிக்கட் விலைகள் குறையாவிட்டாலும், தற்போதைய உலகப் பொருளியல் மந்தம், பயணி விமானத் துறையில் அதிகரித்துவரும் போட்டி ஆகியவற்றால் பயணக் கட்டணங்கள் நிச்சயம் குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்