Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2025 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் சந்தையின் மதிப்பு $5.4 பில்லியன்

சிங்கப்பூரில், 2025 ஆம் ஆண்டுக்குள், மின் வர்த்தகச் சந்தையின் மதிப்பு, 5.4 பில்லியன் டாலராக இருக்கும் என்று அறிக்கை ஒன்று காட்டுகிறது.

வாசிப்புநேரம் -
2025 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் சந்தையின் மதிப்பு $5.4 பில்லியன்

சிங்கப்பூரில், 2025 ஆம் ஆண்டுக்குள், மின்-வர்த்தகச் சந்தையின் மதிப்பு, 5 புள்ளி 4 பில்லியன் டாலராக இருக்கும் என்று அறிக்கை ஒன்று காட்டுகிறது. (படம்: Koh Mui Fong/TODAY))

சிங்கப்பூரில், 2025 ஆம் ஆண்டுக்குள், மின் வர்த்தகச் சந்தையின் மதிப்பு, 5.4 பில்லியன் டாலராக இருக்கும் என்று அறிக்கை ஒன்று காட்டுகிறது.

தெமாசெக் அமைப்பும், Google நிறுவனமும் இணைந்து அதனை வெளியிட்டன.

சிங்கப்பூரில் மின்-வர்த்தகச் சந்தையின் மதிப்பு, சென்ற ஆண்டு ஒரு பில்லியன் டாலராக இருந்தது. 

சில்லறை விற்பனைகளில், இணையம் வழி விற்பனை, 2 புள்ளி ஒரு விழுக்காடாக இருந்தது. 

கருத்தாய்வில் பங்கேற்ற அனைத்து தென்கிழக்காசிய நாடுகளிலும், சிங்கப்பூரிலேயே அந்த விகிதம் ஆக அதிகம். 

2025-ஆம் ஆண்டின் சில்லறை விற்பனையில், மின் வர்த்தகச் சந்தையின் பங்கு 6 புள்ளி 7 விழுக்காடாக இருக்கும் என்று அறிக்கையில் முன்னுரைக்கப்பட்டது.

இந்தோனோசியாவில் அந்த விகிதம் 8 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்