Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிகம் பேர் இனி டுவிட்டரில்!

டுவிட்டரைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகரித்ததாக, அந்நிறுவனம் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

டுவிட்டரைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகரித்ததாக, அந்நிறுவனம் கூறியுள்ளது.  அந்தத் தகவலைத் தொடர்ந்து நிறுவனத்தின் பங்கு விலைகள் அதிகரித்துள்ளன.

சமூக ஊடகக் கடலில் அண்மை காலமாக டுவிட்டர் தத்தளித்து வந்தது. ஆயினும் அதன் முன்னைய முன்னுரைப்புகளைவிட முதல் காலாண்டு அறிக்கையின் முடிவுகள் சிறப்பாக உள்ளன.
டுவிட்டரை அடிக்கடி பயன்படுத்துவோரின் மாதாந்திர எண்ணிக்கை, கடந்தாண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில்  9 விழுக்காடு வளர்ந்துள்ளது. அந்த எண்ணிக்கை இப்போது 328 மில்லியன்.  
அத்துடன், டுவிட்டரின் இழப்பு, கடந்தாண்டு 80 மில்லியன் டாலரிலிருந்து இவ்வாண்டு 62 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது கருத்துகளை வெளிப்படுத்த  டுவிட்டரை அதிகம் பயன்படுத்துவதால், டுவிட்டருக்கு கிடைத்துள்ள ஆதாயத்தின் அளவு  பின்னர் தெரிய வரும் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்