Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்திய ஆகாயப் போக்குவரத்து, புதிய சாம்சுங் கைப்பேசிகக்ளுக்கான தடையை அகற்றியுள்ளது

விமானங்களில் சாம்சுங் கேலாக்ஸி நோட் 7 கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கும், கொண்டு செல்லவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடைகளை இந்தியா அகற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்திய ஆகாயப் போக்குவரத்து, புதிய சாம்சுங் கைப்பேசிகக்ளுக்கான தடையை அகற்றியுள்ளது

(படம்: REUTERS/Edgar Su)

புதுடில்லி: விமானங்களில் சாம்சுங் கேலாக்ஸி நோட் 7 கைப்பேசிகளைப் பயன்படுத்துவதற்கும், கொண்டு செல்லவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடைகளை இந்தியா அகற்றியுள்ளது.

ஆனால், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் வாங்கப்பட்ட கைப்பேசிகளுக்கே அது பொருந்தும்.

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பயணிகள் சாம்சுங் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகளுக்கு மின்னூட்ட வேண்டாம் என்றும் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயணிகளை சிவில் ஆகாயப் போக்குவரத்து செயலகம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் சாம்சுங் நிறுவனம் இன்னும் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகளை விற்பனை செய்ய ஆரம்பிக்கவில்லை.

விமானத்தில் மின்னேற்றம் செய்யவும் அதனைப் பயன்படுத்தவும் பாதுகாப்பாக உள்ளது என்பதைக் குறிக்கும் பச்சை பேட்டரி சின்னம் கொண்ட கைப்பேசிகளை மட்டுமே அது விற்பனை செய்யும் என சாம்சுங் நிறுவனம் கூறியது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்