Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2018ஆம் ஆண்டு முதல் நிதித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும், 2018-ஆம் ஆண்டிலிருந்து வரிக் காரணங்களுக்காக நிதித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன. 

வாசிப்புநேரம் -
2018ஆம் ஆண்டு முதல் நிதித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் சிங்கப்பூர்- ஆஸ்திரேலியா

சிங்கப்பூர் உள்நாட்டுவருவாய் ஆணையம்(படம்: TODAY))

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும், 2018-ஆம் ஆண்டிலிருந்து வரிக் காரணங்களுக்காக நிதித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.

புதிய உடன்பாடு அதற்கு வழிவகுக்கிறது.

சிங்கப்பூர் உள்நாட்டுவருவாய் ஆணையமும் ஆஸ்திரேலியாவும் அவற்றின் நிதிக் கணக்குத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்.

2018-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அந்தத் திட்டம் நடப்புக்கு வரும் என இருதரப்பும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன.

இருதரப்பும் செயல்படுத்தியிருக்கும் விதிமுறைகளும் தகவல்பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருப்திகரமாய் இருப்பதாகக் கூறப்பட்டது.

ஈராண்டுக்கு முன்னர், அந்தத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம்   கூறியிருந்தார். 

அனைத்துலகத் தரநிலைகளைப் பின்பற்றுவதன்வழி, அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்தலாம்.

எல்லைதாண்டிய நிதி தொடர்பான குற்றங்களைத் தடுக்கலாம் என்று திரு தர்மன் கூறியிருந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்