Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மீண்டும் முதல் நிலையில் ஆப்பிள்

மீண்டும் முதல் நிலையில் ஆப்பிள்

வாசிப்புநேரம் -
மீண்டும் முதல் நிலையில் ஆப்பிள்

(படம்: Reuters)

ஆப்பிள் நிறுவனம் உலகின் முதல் நிலைக் கைபேசி நிறுவனமாக மீண்டும் அரியணை ஏறியிருக்கிறது. போட்டி நிறுவனமான சாம்சுங்கை பின்னுக்குத் தள்ளி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்த நிலையைப் பிடித்துள்ளது, ஆப்பிள்.

புதிய iPhone 7 ப்ளஸ்ஸின் அபார விற்பனை அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

அதனால் நிறுவனத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அது கிட்டத்தட்ட 18 பில்லியன் டாலர் லாபத்தை ஈட்டியிருக்கிறது. இதனால் நிறுவனத்தின் பங்கு விலைகள் ஒரே நாளில் சுமார் 3 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

நவம்பர், டிசம்பர் விடுமுறைக் காலாண்டில் சாதனை எண்ணிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் கைபேசிகள் விற்கப்பட்டுள்ளன.  

சாம்சுங் நிறுவனத்தின் அண்மைய சர்ச்சையும் ஆப்பிள் நிறுவனத்துக்குச் சாதகமாக அமைந்ததாய்க் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்