Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

24 மணிநேரத்தில் 20 விழுக்காடு மதிப்பிழந்த மின்னிலக்க நாணயம்

24 மணிநேரத்தில் 20 விழுக்காடு மதிப்பிழந்த மின்னிலக்க நாணயம்

வாசிப்புநேரம் -
24 மணிநேரத்தில் 20 விழுக்காடு மதிப்பிழந்த மின்னிலக்க நாணயம்

(படம்: REUTERS/Dado Ruvic/கோப்புப்படம்)

கணக்குத் தணிக்கை நிறுவனங்களில் ஆகப் பெரிய நான்கு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ப்ரைஸ் வாட்டர் கூப்பர்ஸ்(Price Water Coopers) நிறுவனம், தமது சேவைகளின் பேரில், Bitcoin எனும் மின்னிலக்க நாணயத்தைச் செலுத்தும் முறையை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது.

அத்தகைய பணம் செலுத்தும் முறை, ஹாங்காங்கில் உள்ள அதன் கிளைகளில் முதன்முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அது கூறியது.

மிகவும் நிலையற்றதொரு சூழலில், நிறுவனம் அந்த முடிவை எடுத்திருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த வாரம் மட்டும், மின்னிலக்க நாணயத்தின் மதிப்பு, 11,400 டாலர் மதிப்பை சாதனை அளவாக எட்டியது. ஆனால், 24 மணி நேரத்தில், அதன் மதிப்பு 20 விழுக்காடு சரிந்தது.

தற்போது, அதன் மதிப்பு 9,600 டாலர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்