Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

2020-ஆம் ஆண்டு, சிங்கப்பூரர்களுக்கு எப்படி இருந்தது?

2020-ஆம் ஆண்டு, சிங்கப்பூரர்களுக்கு எப்படி இருந்தது?

வாசிப்புநேரம் -

2020-ஆம் ஆண்டு!

யார் எதிர்பார்த்தது இந்த ஆண்டு இப்படியெல்லாம் நடக்குமென்று?

சிங்கப்பூரில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும், பல விதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்திய சிரமமான ஆண்டாகவே இது அமைந்தது.

எங்கோ ஏதோ கிருமியாம், ஊர் ஊராகத் தொற்றுகிறதாம் என்று நினைத்திருந்த சிங்கப்பூரர்களுக்கு, தங்கள் கரைக்கு அது சில வாரங்களிலேயே வந்து சேர்ந்தபோது அதிர்ச்சி...

ஒற்றைப்படையில் இருந்த கிருமித்தொற்று எண்ணிக்கை, ஏப்ரல், மே-மாதங்களில் சரசரவென ஆயிரத்தைத் தாண்டியபோது அதிர்ந்துபோயினர் மக்கள்.

திறன்பேசியில் வந்துவிழும் திடீர்ச் செய்தியில் இருந்த எண்ணிக்கையைப் பார்த்துத் திகைத்துப் போயினர் சிங்கப்பூர்வாசிகள்.

கிருமிப்பரவலின் கடுமையை முன்கூட்டியே ஊகித்துவிட்ட நிபுணர்களின் உதவியோடு, அரசாங்கம் கெடுபிடியான பல கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தது.

கிருமிப்பரவலுக்கு எதிரான அதிரடித் திட்டம் நடப்புக்குவந்து, கிட்டத்தட்ட நாட்டை முடக்கியது.

விரைவுச்சாலைகள் வெறிச்சோடிப் போயின.

சாங்கி விமான நிலையம் ஆளரவமற்றுப்போனது.

மெர்லயனோடு படமெடுக்க, எந்தவொரு சுற்றுப்பயணியும் இல்லை.

நேரமில்லை நேரமில்லை என்று பறந்துகொண்டிருந்த பலரும், நேரத்தை என்ன செய்து கழிப்பது எனச் சிந்திக்கத் தொடங்கினர்.

இவையெல்லாம், பொருளியலை கடுமையாக பாதித்தன.

வாழ்நாளில் இப்படி ஒரு நிலையைச் சந்தித்திராத வர்த்தகர்களுக்கு, இது கடுமையான சவாலாக அமைந்தது என்றார் நாணயமாற்று வணிகர், திரு. நிவாஸ்.

"தற்போதைய சூழலில், வெளிநாடுகளிலிருந்து இங்கே வருவதும், இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதும் கடினமாயிற்று. இதனால் என்னைப்போன்ற நாணயமாற்று வணிகர்களின் வியாபாரம் நொடித்துப்போனது. எங்களை நம்பியிருந்த ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதும் சவாலாயிற்று."

தீமையிலும் ஒரு நன்மை.

கொரோனா கிருமிப்பரவல், சில நன்மைகளையும் விட்டுச் சென்றுள்ளது என்கிறார், திரு. முகமது காலில்.

"நண்பர்கள், உறவினர்களையெல்லாம் நினைத்தவுடன் பார்க்கமுடியவில்லை. இருந்தாலும் நம் அனைவருக்கும் நேரத்தை எப்படிச் சமாளிப்பது என்ற பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. முன்பெல்லாம் நேரமே இல்லை எனச் சாக்குப்போக்கு சொல்லிய பலருக்கும், இவ்வாண்டு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது."

2020-ஆம் ஆண்டில் நேர்ந்த முக்கிய உள்ளூர் நிகழ்வுகள் என்னென்ன?

சவால்மிக்க காலம், சிங்கப்பூரர்களை எவ்வாறு ஒன்றிணைத்தது?

இன்றிரவு 9.30 மணிக்கு, வசந்தம் ஒளிவழியில் இடம்பெறும் எதிரொலி நிகழ்ச்சியில் அதுபற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்