Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தாமதமாகத் தயாராகும் BTO வீடுகள்... விரைவுபடுத்த உதவும் புதிய வழிகள்

BTO எனப்படும் தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் வீடுகள் தயாராவதை விரைவுபடுத்துவதற்குச் சில வழிகள் இருப்பதாகக் கட்டுமானப் பொறியாளர்கள் கூறுகின்றனர். 

வாசிப்புநேரம் -
தாமதமாகத் தயாராகும் BTO வீடுகள்... விரைவுபடுத்த உதவும் புதிய வழிகள்

படம்: Jeremy Long

BTO எனப்படும் தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் வீடுகள் தயாராவதை விரைவுபடுத்துவதற்குச் சில வழிகள் இருப்பதாகக் கட்டுமானப் பொறியாளர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய சூழலால் ஏற்பட்ட தாமதத்தைத் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஓரளவுக்குக் குறைக்கமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

BTO இல்லத்தின் சாவியைப் பெறுவதற்குப் பொதுவாக மூன்றிலிருந்து நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இப்போதைய சூழலால் 43,000 வீடுகள், எதிர்பார்த்ததைவிடத் தாமதமாகத் தயாராகும்.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளாலும் ஊழியர் பற்றாக்குறையாலும் ஏற்பட்டிருக்கும் தாமதத்தைக் குறைக்கக் கட்டுமானத் துறையினர் மாற்றுவழிகளை நாடுகின்றனர்.


S. யோகீஸ்வரன்
துணைத் தலைவர்
The Institution of Engineers, Singapore

வேகப்படுத்துவது என்று சொல்லும்போது தொழில்நுட்பத்தை வைத்துத்தான் எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறோம். புதிதாகக் கட்டப்படும் வீடுகளுக்கு வெளிநாடுகளில் பல புதிய தொழில்நுட்பங்களை வைத்துச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஒன்று முப்பரிமாண அச்சிடும் முறை. ஜெர்மனியில் இதைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதையே நாம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அதே மாதிரி மின்னிலக்கம் மூலமாகப் பல வடிவமைப்புகளை விரைவாகவே செய்து நேரத்தைக் குறைத்து வருகிறோம்.

BTO கட்டுமானப் பணிகளில் என்னென்ன சவால்கள் உள்ளன?

தாமதத்தால் பாதிக்கப்படும் குடும்பங்கள் அவற்றை எப்படிச் சமாளிக்கின்றன?

இவற்றுக்குரிய விடைகளை இன்றிரவு 9:30 மணிக்கு வசந்தத்தில் ஒளியேறும் 'எதிரொலி' நிகழ்ச்சியில் பார்க்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்