Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

ஓய்வுக்காலச் சேமிப்பில் இளையர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்

ஓய்வுக்காலச் சேமிப்பில் இளையர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்

வாசிப்புநேரம் -

ஓய்வுக்காலத்திற்குச் சேமிப்பதில் நடுத்தர வயதினர் மட்டுமல்லாமல் இளையர்களும் அதிக கவனம் செலுத்திவருகின்றனர்.

இப்போதே திட்டமிடத் தொடங்கினால் ஓய்வுபெறும் காலத்தில் போதுமான சேமிப்பு இருக்கும் என்று அவர்களில் பலர் எண்ணுகின்றனர்.

ஓய்வுக்காலத்திற்குப் போதிய அளவு சேமித்துவிட்டோம்... இனி கவலையில்லை என்று நினைத்திருந்த மூத்தோர் சிலர், கிருமிப்பரவலின் கடும் பாதிப்பை எதிர்பார்க்கவில்லை.

அந்த பாதிப்பின் கடுமையை இளம் வயதினரும் உணர்ந்துள்ளனர்.
விக்ன கார்த்திகா, 31

கோவிட் காலத்தில் பலருக்கு வேலைவாய்ப்புகள் கஷ்டமாக அமைந்தன. பலர் வேலைகளையும் இழந்தனர். அதில் நானும்தான் பாதிப்படைந்தேன்.

அப்போது நான் யோசித்துப் பார்த்தேன். இப்படியொரு தருணம் மறுபடியும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அவசரகாலச் சேமிப்பு இருப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.

ஒருவர் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக இருக்கவேண்டுமெனில் நிதி நிர்வாகமும் அவசியம்.

அதை எங்கே, எப்படித் தொடங்குவது எனத் தெரியாதவர்களுக்குத் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

வயதான காலத்தில் போதிய சேமிப்பு இல்லாத சிங்கப்பூரர்கள் என்ன செய்கின்றனர்?

அதுபற்றி இன்றிரவு 9:30 மணிக்கு வசந்தத்தில் ஒளியேறும் 'எதிரொலி' நிகழ்ச்சி ஆராய்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்