Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

அனைவரையும் உள்ளடக்கிய நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

விழாக்காலத்தில் தனித்து வாழும் மூத்தோருக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் கைகொடுப்பதில் இங்குள்ள பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -

விழாக்காலத்தில் தனித்து வாழும் மூத்தோருக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் கைகொடுப்பதில் இங்குள்ள பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

நோன்புப் பெருநாள் காலத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். முதுமைக் காலத்தில் தனிமையில் வாடும் மூத்தோர் கவலைப்படக்கூடாது என்ற எண்ணத்தில் அமைந்தது 'சலாம், நீங்கள் நலமா?' எனும் நிகழ்ச்சி,

அதற்கு சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்தது.


நசீர் கனி

ஆலோசகர்

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

பல வேளைகளில் நம் சமுதாயத்திற்குப் பாடுபட்டவர்கள். இப்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடப்பதைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் சமுதாயத்தில் நெருங்கிவர முடியாமல், வெளியே வரமுடியாத நிலையில் இருப்பதனால் சமுதாயத்தில் உள்ள பலரையும் பார்க்கமுடியாமல் இருப்பதனால் அவ்ர்களைப் போய் நாங்கள் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறார்கள்.

வசதிகுறைந்தோருக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொடுத்து உதவியுள்ளது ஜாமியா சிங்கப்பூரின் உணவு வங்கி.

நோன்பு மாதத்தில் இரவு உணவு முக்கியம். தேவையுடையோருக்கு அதை வழங்கியது தாருல் அர்காம் சிங்கப்பூர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற IFTAR2u.

இப்படிப் பல அமைப்புகள் கோவிட் கால நோன்புப் பெருநாளை அனைவரும் முடிந்தவரை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கு உதவ முன்வந்தன.

நாளை நோன்புப் பெருநாளுக்கான ஏற்பாடுகள் குறித்த விரிவான தகவல்கள் இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தத்தில் 'எதிரொலி' நிகழ்ச்சியில் இடம்பெறும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்