Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

"சிங்கப்பூரின் வெள்ளச்சூழலைக் கையாள வடிகால்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும்."

"சிங்கப்பூரின் வெள்ளச்சூழலைக் கையாள வடிகால்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும்." 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் அண்மையில் பெய்த கனத்த மழையால் கால்வாய்களிலும் வடிகால்களிலும் தண்ணீரின் அளவு சுமார் 90 விழுக்காட்டை எட்டியது.

அதைக் கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளப் பாதுகாப்பு முறைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இனி வரக்கூடிய திடீர் வெள்ளத்திற்குத் தயார் நிலையில் இருப்பது முக்கியம் என்கிறார் Fides Global நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர், முனைவர். நா. வெங்கடராமன்.


"எப்போது மழை வரும் என்பதை இப்போதிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் 65 விழுக்காடு சொல்லும். தொழில்நுட்பம் வளரவளர அது 90 விழுக்காடு ஆகும். இருந்தாலும் வெள்ளம் குறித்து நம்மிடம் அச்சம் இருப்பதால் நாம் நம்மைத் தயார்நிலையில் வைத்துக்கொள்ளலாம். தடுப்புநிலை என்று பார்த்தால் இந்த மழைத் தோட்டம் (Rain Garden) மற்றும் சாய்வான, தாழ்வாரப் பகுதிகளைச் சீரமைக்க வேண்டும். என்ன மழை வந்தாலும் நம்மால் தயார் செய்துகொள்ள முடியும் என்ற நிலை வந்தாலே இது ஒரு பெரிய வெற்றி என்று சொல்வேன்."


பருவநிலை மாற்றமும் நகரமயமாதலும் வெள்ள அபாயத்தை அதிகரிக்கின்றன.

படம்:Sinagpore National Archives

எதிர்கால வெள்ளச் சூழலுக்கு நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம் என்பதை இன்றிரவு ஒன்பதரை மணிக்கு வசந்தத்தில் ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

படம்:Sinagpore National Archives

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்