Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பதின்மவயதிலேயே குண்டர் கும்பல்களில் போய்ச்சேரும் இளையர்கள்- என்ன காரணம்?

பதின்மவயதிலேயே குண்டர் கும்பல்களில் போய்ச்சேரும் இளையர்கள்- என்ன காரணம்?

வாசிப்புநேரம் -

கடந்த சில மாதங்களாகவே குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைதானதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆபத்தான இந்தக் கும்பல்களில் சிலர் 13 வயதிலேயேகூடப் போய்ச்சேர்கின்றனர்.


பணம், நண்பர்களின் தூண்டுதல், ஏற்கனவே குண்டர் கும்பலில் இருப்பவர்கள் கொடுக்கும் தவறான நம்பிக்கை... இவை இளையர்கள் குண்டர் கும்பலில் போய்ச்சேர்வதற்குக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.


ஆனால் ஒருவர் மனந்திருந்தி குண்டர் கும்பல் பிடியிலிருந்து வெளியேறி, முழுமையாக மீண்டு வரும்போது சமூகத்தின் ஆதரவு மிக முக்கியம்.

அவர்கள் சிறையிலிருந்து வெளியேறும்போது சமூகத்தின் சிறையில் நுழைவதுபோல் உணர்வார்கள். இதைத் தவிர அவர்களை மற்றவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதுபோலவே தோன்றும். முன்னாள் குண்டர் கும்பல் உறுப்பினருக்கு சமூகம் மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால்தான் அவர்கள் பழைய வாழ்க்கைக்குப் போக மாட்டார்கள்.

- J. ராதிகா, துணை இயக்குனர், Aftercare@YR


குண்டர் கும்பலில் போய் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறியவர்கள் என்னென்ன சிரமங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர்களே கூறுகின்றனர். உணர்வுபூர்வமான அவர்களின் கதைகளை இன்றிரவு 9.30மணிக்கு வசந்தம் ஒளிவழியில் இடம்பெறும் 'எதிரொலி' நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்