Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

'எதிரொலி' குழுவில் சேர ஆர்வமா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு

செய்தி, நடப்பு விவகாரத்தில் உங்களுக்கு ஈடுபாடு உள்ளதா? பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் பேசுவதில் ஆர்வமா?

வாசிப்புநேரம் -

செய்தி, நடப்பு விவகாரத்தில் உங்களுக்கு ஈடுபாடு உள்ளதா? பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் பேசுவதில் ஆர்வமா?

மீடியாகார்ப் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் "எதிரொலி" நிகழ்ச்சிக்குப் புதிய தயாரிப்பாளர் /படைப்பாளரைத் தேடி வருகிறது. அதற்கு நீங்களும் உங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான விவரங்கள் காணொளியில் உள்ளன.

விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் Ethiroli [at] mediacorp.com.sg அனுப்பவும்.

விண்ணப்பங்களுக்கான பனுவல்கள் (Passage)இதோ:


பனுவல் 1

வணக்கம்

ரத்தம்.... எந்த நேரத்தில் யாருக்குத் தேவைப்படும் என்று சொல்ல முடியாது.

மூப்படையும் சமூகம், புதிய மருத்துவமனைகள், மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றால் ரத்தத்துக்கான தேவை இங்கு ஒவ்வோர் ஆண்டும் 5 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

ஆனால், தற்போது சிங்கப்பூரில் 1.8 விழுக்காட்டினர் மட்டுமே ரத்த தானம் செய்கின்றனர்.

ரத்த தானம் செய்வது எவ்வளவு முக்கியம்?

எந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது?

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?

பார்க்கலாம், இன்றைய எதிரொலியில்.


பனுவல் 2

ருசியான பிராட்டா...
பொரித்த கோழி...
தித்திக்கும் தின்பண்டங்கள்...

இவை அனைத்தும் நம்மில் பலர் விரும்பி உண்ணும் உணவு வகைகள்.

ஆனால், இவற்றைத் தயாரிக்க Partially Hydrogenated Oil எனப்படும் எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

உடலுக்குப் பாதகம் விளைவிக்கக்கூடிய இந்த எண்ணெய் மீதான தடை 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நடப்புக்கு வருகிறது.
இந்தத் தடையினால் உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்...

பல பொருள்களின் விற்பனையிலும் தடை விதிக்கப்படலாம்.
ஏன் இந்த எண்ணெய் தடை செய்யப்படுகிறது?
எந்தெந்த பொருள்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன?

PHO எண்ணெயைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் இதற்கேற்ப என்ன மாற்றங்களைச் செய்யவுள்ளன.
இவை பற்றிய கண்ணோட்டம் இன்றைய எதிரொலியில்....


பனுவல் 3

நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள். சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவை தீவெங்கும் கோலாகலமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

இன்று சிங்கப்பூர் கண்டுள்ள அதிவேக வளர்ச்சிக்குப் பல தரப்பினர் பங்காற்றியுள்ளனர்.

கட்டடக் கலை, எழுத்து, கலை, கலாசாரம், வர்த்தகம், கல்வி, மருத்துவம் என்று பல துறைகளில் இன்றியமையாத பங்காற்றி வருகின்றனர் இந்திய முஸ்லிம் சமூகத்தினர்.

அவர்களைப் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம் இன்றைய எதிரொலியில்....

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்