எதிரொலி

Images
  • salt (1)

இந்தியர்கள் அளவுக்கு அதிகமாக உப்பை உட்கொள்கின்றனர்

சிங்கப்பூரர்கள் பரிந்துரைக்கப்படும் அளவைவிட அதிக உப்பை உணவில் சேர்த்துக்கொள்வது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இந்தியர்கள் ஆரோக்கியமான அளவைப் போன்று இரண்டு மடங்கிற்கும் அதிக உப்பை உட்கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு உட்கொள்ளலாம் என்பதைப் பலர் தெரிந்து வைத்திருப்பதில்லை.

அதேநேரம் நமது விறுவிறுப்பான வாழ்க்கைமுறையில் எவ்வளவு உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறோம் என்று அன்றாடம் கவனித்துச் சாப்பிடுவதும் கடினம்.

ஒரு நாளைக்கு 5 கிராம் அதாவது ஒரு தேக்கரண்டிக்கும் சற்றுக் குறைவான அளவிலேயே உப்பை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஒரு கரண்டி உப்பு மட்டும் ஒரு நாளைக்கு ஒருவர் உட்கொள்ளவேண்டும். அதற்கு மீறினால் நல்லதல்ல..இந்தியர்கள் என்னவென்றால் அவர்கள் மூன்று தேக்கரண்டி அதாவது ஒரு மேசைக்கரண்டி அளவு உப்பு உட்கொள்கிறார்கள். இது முடியாது.

- நாயர் V P

இதய சிகிச்சை நிபுணர், மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை

அளவோடு உப்பைச் சேர்த்துக்கொள்ளும்போது ரத்த அழுத்தம், பக்கவாதம், இதயநோய் போன்ற ஆபத்துகளைத் தவிர்க்கலாம். 


உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்யத் தொடங்கினால் பிறகு அதுவே பழகிவிடும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வளவு பெரிய மாற்றம் நாம் செய்தால் 2, 3 வாரங்களில் நமது நாவின் ருசி மொட்டுகளின் தன்மை மாறிவிடும். மிகக் குறைவான உப்பில் அதே சுவை வர ஆரம்பித்துவிடும்.

-ரூஃபஸ் டேனியல்

குடும்பநல மருத்துவர், யீஷூன் பலதுறை மருந்தகம்

உணவில் உப்பைக் குறைப்பது சிரமமா? நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் எவ்வளவு உப்பு இருக்கிறது?

இவைபற்றிய சுவையான தகவல்களை வழங்குகிறது இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் இடம்பெறும் ‘எதிரொலி’ நிகழ்ச்சி. 

Top