Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் கொரோனா கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியது

நொவல் கொரொனா கிருமித்தொற்றுக்குப் பலியாகி வருவோரின் எண்ணிக்கை சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
சீனாவில் கொரோனா கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியது

(படம்: Reuters/Tyrone Siu)

நொவல் கொரொனா கிருமித்தொற்றுக்குப் பலியாகி வருவோரின் எண்ணிக்கை சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி மாண்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

கிருமிப் பரவலுக்குக் காரணமான ஹூபெய் மாநிலத்தில் மட்டும் 103 பேர் மாண்டனர்.

கிருமித்தொற்றால் மேலும் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 42,000ஐக் கடந்துவிட்டது.

ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் இதுவரை 10.6 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் நகரில் வசிக்கும் 99 விழுக்காட்டினர்.

கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடம் மீண்டும் கிருமித்தொற்றியதற்கான அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், புதிய வகை கிருமித்தொற்றைச் சமாளிப்பதற்கான எதிர்ப்புச் சக்தி குணமடைந்தவர்களிடம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய கூடுதல் ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்