Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இணைய ஒளிபரப்புச் சேவைகளால் திரையரங்குகள் காலியாகுமா ?

அமெரிக்காவில் திரையரங்குகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே இருந்து திரைப்படங்களைக் கண்டு ரசிப்போரின் எண்ணிக்கை,  அதிகரித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
இணைய ஒளிபரப்புச் சேவைகளால் திரையரங்குகள் காலியாகுமா ?

(படம்: Reuters)

அமெரிக்காவில் திரையரங்குகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே இருந்து திரைப்படங்களைக் கண்டு ரசிப்போரின் எண்ணிக்கை, அதிகரித்திருக்கிறது.

கடந்த ஓராண்டில் வெளியிடப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் சில, பெரும் வெற்றிப்படங்களாகத் திகழ்ந்துள்ளன.

"ஸ்டார் வார்ஸ்", "பியூட்டி அண்ட் தி பீஸ்ட்" ஆகிய படங்கள் ஒவ்வொன்றும் அரை பில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளன.
ஆனால் இவ்வாண்டில் விற்பனையான திரையரங்க நுழைவுச் சீட்டுகள்
1.2 பில்லியன் மட்டுமே.

1992ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவே ஆகக் குறைவான எண்ணிக்கை.

அமெரிக்காவில் பலரும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஹுலு போன்ற இணைய ஒளிபரப்புத்தளங்களின் வாயிலாகத் திரைப்படங்களைக் காண்பதே இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

திரையரங்க நுழைவுச் சீட்டு ஒன்றின் கட்டணத்திற்குச் சமமான மாதாந்தரக் கட்டணத்தில் அந்தத் தளங்கள் எண்ணற்ற திரைப்படத் தெரிவுகளை வழங்குகின்றன.

இருப்பினும், கூட்டத்துடன் திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தை வீட்டில் பார்க்கும்போது பெறமுடியாது.

ஆகவே திரையரங்குகளின் பிரபலம் அவ்வளவு சீக்கிரம் மங்கிவிடாது என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

தயாரிப்பாளர்கள் உயர்தரமான திரைப்படங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினால் மற்றது தானாக நடக்கும் என்கின்றனர் அவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்