Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கோல்டன் குளோப் நிகழ்ச்சியில் ஓப்ராவின் உரை- அரசியல் இலட்சியம் கொண்டுள்ளதா?

பிரபல கோல்டன் குளோப் நிகழ்ச்சியில் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரியின் தொடக்கவுரையில் அவரது அரசியல் இலட்சியங்கள் தென்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

வாசிப்புநேரம் -

லாஸ் ஏஞ்சலிஸ்: பிரபல கோல்டன் குளோப் நிகழ்ச்சியில் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரியின் தொடக்கவுரையில் அவரது அரசியல் இலட்சியங்கள் தென்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

கலையுலகத்திற்கான அவரது மாபெரும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஓப்ராவுக்கு Cecil B DeMille விருது வழங்கப்பட்டது.

தொலைக்காட்சிக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விருது நிகழ்ச்சியாக கோல்டன் குளோப் உள்ளது. அமெரிக்க அதிபருக்கான அடுத்த தேர்தல் 2020இல் நடைபெறவுள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக நிற்க ஓப்ராவை அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆயினும் ஓப்ரா உறுதியான எந்த முடிவையும் வெளிப்படுத்தவில்லை.

கடந்த ஆண்டில், புளூம்பர்க் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஓப்ரா அரசியல் குறித்துப் பேசினார். அதிபராவதற்கு அரசாங்கப் பணி அனுபவம் தேவைப்படும் என நினைத்ததால் தாம் அத்தகைய இலட்சியத்தைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார். ஆனால் திரு. டிரம்ப் அதிபர் பதவியை ஏற்ற பின்னர், தமது எண்ணத்தை மாற்றிக்கொள்ளக் கூடும் என்பதை ஓப்ரா மறைமுகமாய் தெரிவித்தார்.

63 வயது ஓப்ரா, தாம் நடத்தி வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வழி, மிகப் பெரும் பிரபலமாய் உருவெடுத்தார். பாலியல் தொல்லைக்கு எதிரான #MeToo இயக்கத்தையும் அவர் பாராட்டிப் பேசினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்