Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

உடைத்து நொறுக்கு!

மடிக் கணினிகள், கைபேசிகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்றவற்றை உடைப்பதற்காகவே உள்ளது ஓர் அறை.

வாசிப்புநேரம் -

கோபம் கண்ணை மறைக்கும்போது எத்தனை முறை எதையாவது உடைக்க வேண்டும் எனத் தோன்றியிருக்கும்?

அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கிறது அமெரிக்காவின் டாலஸ் நகரில் செயல்படும் மன்றம் ஒன்று.

மடிக் கணினிகள், கைபேசிகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்றவற்றை உடைப்பதற்காகவே உள்ளது ஓர் அறை.

பொருட்களை உடைப்பதற்கு உலோகக் கம்பிகளும் மட்டைகளும் வழங்கப்படும்.

அரை மணி நேரத்துக்குக் கட்டணம் US$30.

கடந்த மார்ச்சிலிருந்து சுமார் 1500 பேர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.

Wrecking மன்றம் என அது அழைக்கப்படுகிறது.

ஒரு வாரத்துக்குச் சுமார் 60இலிருந்து 70 மின்னியல் சாதனங்கள் உடைத்து நொறுக்கப்படுகின்றன.

இந்த அரிய விளையாட்டுக்கான பொருட்கள் எப்படிச் சேகரிக்கப்படுகின்றன தெரியுமா?

வர்த்தகத்திலிருந்து விலகும் நிறுவனங்கள் சில அவற்றின் பொருட்களை மன்றத்துக்குக் கொடுக்கின்றன.

வேறு சிலரும் தங்களுக்குத் தேவையில்லாததைக் கொடுத்து விடுகின்றனர்.

சுக்கு நூறாகும் பொருட்கள் முறையாக மறுபயனீடு செய்யப்படுகின்றன.

பிற வர்த்தகத்தில் இருப்பது போல இதிலும் சவால்கள் இருக்கின்றன.

ஒரு நாள், மன்றத்தின் உரிமையாளர், அவரின் மடிக் கணினியை அடித்து நொறுக்கும் அறையில் வைத்துவிட்டு சற்று நேரம்தான் வெளியில் சென்றார்.

வந்து பார்த்தபோது அவரது மடிக் கணினி தூள் தூளாக இருந்ததாம்!
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்