Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மீண்டும் இளமைத் தோற்றத்துடன் மாதவன்

'அலைபாயுதே', 'மின்னலே' என்ற படங்களைக் கண்டு காதலைப் பற்றி தெரிந்துகொண்ட அன்றைய பிள்ளைகளில் பலர் இந்நேரம் திருமணம், குழந்தைகள் என்று அடுத்தடுத்த படிகளைத் தாண்டிக்கொண்டிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
மீண்டும் இளமைத் தோற்றத்துடன் மாதவன்

தாடியை இழந்த மாதவன். (படம்: மாதவனின் ஃபேஸ்புக் பக்கம்)

'அலைபாயுதே', 'மின்னலே' என்ற படங்களைக் கண்டு காதலைப் பற்றி தெரிந்துகொண்ட அன்றைய பிள்ளைகளில் பலர் இந்நேரம் திருமணம், குழந்தைகள் என்று அடுத்தடுத்த படிகளைத் தாண்டிக்கொண்டிருக்கின்றனர்.

நடிகர் மாதவனோ, அன்று போல் இன்றும் இளமைப் பொலிவுடன் காணப்படுகிறார். 'விக்ரம் வேதா' என்ற தமிழ் மர்மப் படத்திற்காக வைத்திருந்த தாடியை அகற்றியதைக் காட்டும் படம் ஒன்றை அந்நடிகர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றினார்.

தாம் மீண்டும் இளமையாக இருப்பதாக உணர்வதாய் அவர் அந்தப் பதிவில் எழுதினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அவர் மீண்டும் படங்களின் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்