சமூக ஊடகங்களில் 'வேலையில்லா பட்டதாரி 2' வரைகலைப் படங்கள்
தனுஷும் கஜோலும் ஜோடியாக இணைந்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தையொட்டிய வரைகலைப் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
தனுஷும் கஜோலும் ஜோடியாக இணைந்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தையொட்டிய வரைகலைப் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
திரையரங்குகளுக்கு அப்பால், ரசிகர்களைத் தொடர்ந்து சுண்டியிழுக்கும் புதிய உத்தியைப் படக்குழு பயன்படுத்தியுள்ளது.
Hike என்ற சமூகத் தளத்தின் பயனீட்டாளர்கள் அந்த வரைகலைப் படங்களைப் பயன்படுத்தலாம். அத்துடன் தனுஷின் தலைக்கவசம், கஜோலின் கறுப்புக் கண்ணாடி ஆகியவற்றைப் பயனீட்டாளர்கள் தங்களது சொந்த நிழற்படங்களில் சேர்க்கலாம்.
'வேலையில்லா பட்டதாரி 2' இவ்வாண்டில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவரும் அந்தப் படத்தில் அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.