Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஐந்து 'பாஃப்டா' (Bafta) விருதுகளைக் குவித்த திரைப்படம்

'பாஃப்டா' (Bafta) என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் திரைப்பட, தொலைக்காட்சிக் கலைச் சங்க விருது விழாவில் "Three Billboards Outside Ebbing, Missouri" என்ற குற்றவியல் திரைப்படம் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.

வாசிப்புநேரம் -

சிறந்த படம், தனிச்சிறப்பு வாய்ந்த பிரிட்டிஷ் படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான விருதுகளை அந்தத் திரைப்படம் பெற்றது.

{"Three Billboards Outside Ebbing, Missouri" படக்குழுவினர். படம்: AFP}

"Darkest Hour" திரைப்படத்தில் நடித்த கேரி ஓல்ட்மேன் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகையாக பிரான்சஸ் மெக்டோர்மண்ட் கௌரவிக்கப்பட்டார். ஆங்கிலம் அல்லாத திரைப்படப் பிரிவில் "The Handmaiden", சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது.

"I Am Not Your Negro" என்ற படம், சிறந்த ஆவணப்பட விருதை வென்றது. சிறந்த உயிரோவியப் பட விருதை "Coco" பெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்