Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

இவ்வாண்டில் ஆக அதிகச் சம்பளம் வாங்கும் பெண் இசைக்கலைஞர்

பிரபல 'பாப்' பாடகி பியோன்ஸே, இவ்வாண்டில் ஆக அதிகச் சம்பளம் வாங்கும் பெண் இசைக்கலைஞராக உள்ளார்.

வாசிப்புநேரம் -
இவ்வாண்டில் ஆக அதிகச் சம்பளம் வாங்கும் பெண் இசைக்கலைஞர்

(படம்: Channel NewsAsia)

பிரபல 'பாப்' பாடகி பியோன்ஸே, இவ்வாண்டில் ஆக அதிகச் சம்பளம் வாங்கும் பெண் இசைக்கலைஞராக உள்ளார். Forbes சஞ்சிகையின் வருடாந்திரப் பட்டியலில் அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

அவருக்கு அடுத்தடுத்த நிலைகளில் அடெல், டெய்லர் சுவிஃப்ட், செலின் டியோன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

பியோன்ஸே தமது தனிப்பாடல்களிலிருந்தும் "Formation" இசை நிகழ்ச்சியிலிருந்தும் 105 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்ததாக Forbes சஞ்சிகை தெரிவித்தது.

Ivy Park எனப்படும் ஆடை அலங்கார நிறுவனம் உள்ளிட்ட சில தொழில்களையும் பியோன்ஸே நடத்துகிறார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்