Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

தமிழ்நாட்டு முதல்வராகத் தயார் - நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தேவை ஏற்பட்டால் தமிழ்நாட்டின் முதல்வாராகத் தாம் தயார் என்று தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

நடிகர் கமல்ஹாசன் தேவை ஏற்பட்டால் தமிழ்நாட்டின் முதல்வாராகத் தாம் தயார் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடேக்கு வழங்கிய பேட்டியில் அவருக்கு முதல்வராகும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, அதற்கான கட்டாயம் இருந்தால் பதவியேற்கத் தயார் என்று கூறினார்.

கடினமான பொறுப்பாக இருந்தாலும் நாட்டில் நிலைத்தன்மையை நிறுவும் பணியை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருப்பதாகக் கமல்ஹாசன் கூறினார். மக்களுக்குச் சேவையாற்ற இதுவே வழி என்று தெரிவித்தார் அவர்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சென்னையில் சந்தித்ததைத் தொடர்ந்து கமல்ஹாசன் தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

திரு கெஜ்ரிவாலும் அவர் அரசியலில் நுழைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அண்மையில் கேரள மாநில முதல்வரையும் சந்தித்துப் பேசினார்.

'உலகநாயகன்' விரைவில் தமிழகத்தின் நாயகனாக அவதாரம் எடுப்பாரா?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்