Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மறைந்த 'லிங்க்கின் பார்க்' பாடகருக்கு உலகெங்கிலும் அஞ்சலி

'லிங்க்கின் பார்க்' என்ற பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர், மறைந்த செஸ்ட்டர் பென்னிங்டனுக்கு அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

வாசிப்புநேரம் -
மறைந்த 'லிங்க்கின் பார்க்' பாடகருக்கு உலகெங்கிலும் அஞ்சலி

லாஸ் ஏஞ்சலிஸில் மறைந்த செஸ்ட்டர் பென்னிங்டனுக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள். (படம்: Reuters)

லாஸ் ஏஞ்சலிஸ்:  'லிங்க்கின் பார்க்' என்ற பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர், மறைந்த செஸ்ட்டர் பென்னிங்டனுக்கு அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் தமது வீட்டில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார்.

பென்னிங்டன் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டுமின்றி, ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா, தென்னமெரிக்கா ஆகிய கண்டங்களில் பென்னிங்டனை நினைவுகூரும் அஞ்சலிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

300க்கும் மேற்பட்ட அத்தகைய அஞ்சலிக் கூடங்களை 'லிங்க்கின் பார்க்' இசைக்குழு அங்கீகரித்துள்ளது.

பென்னிங்டனுக்கு அஞ்சலிக் கூடத்தை அமைக்க விரும்பும் ரசிகர்கள், அதனை ஃபேஸ்புக்கில் நிகழ்வாகப் பதிவு செய்து 'லிங்க்கின் பார்க்' இசைக்குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

'லிங்க்கின் பார்க்' இசைக்குழுவிற்காக செஸ்டர் பென்னிங்டன் பாடிய உருக்கமான பல பாடல்களைக் கேட்டு வளர்ந்தனர் இன்றைய தலைமுறையினரில் பலர். அவர் மறைந்தாலும் அவரது  குரல் ரசிகர்களின் மனத்தில் தொடர்ந்து ஒலிக்கிறது.

'லிங்க்கின் பார்க்' இசைக்குழு, பென்னிங்டனை கௌரவிப்பதற்காக chester.linkinpark.com. என்ற தற்கொலைத் தடுப்பு இணையத் தளத்தை நிறுவியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்