Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதன்முறையாக சிங்கப்பூர் வந்திருக்கும் பாலிவுட் நடிகர் ஆமிர் கான்

முதன்முறையாக சிங்கப்பூர் வந்திருக்கும் பாலிவுட் நடிகர் ஆமிர் கான்

வாசிப்புநேரம் -
முதன்முறையாக சிங்கப்பூர் வந்திருக்கும் பாலிவுட் நடிகர் ஆமிர் கான்

(படங்கள்: Howard Law)

இந்தியாவின் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தமது புதிய திரைப்படமான "Secret Superstar"-ஐ விளம்பரப்படுத்த சிங்கப்பூர் வந்திருக்கிறார்.

அதை ஆமிர் கானின் சொந்தத் திரைப்பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கு முன்னர் வெளியான அவரது "Dangal" திரைப்படம் உலக அளவில் ஆக அதிக வசூலைக் குவித்த இந்தியத் திரைப்படம் என்று பெயர் வாங்கியது.

சிங்கப்பூரில் லஸால் கலைக் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களைச் சந்தித்தார் கான்.

தமது கலைப்பயணம், திரைப்பட அனுபவம் ஆகியவற்றை கலந்துரையாடலில் பங்கெடுத்த 80 இளையர்களிடம் பகிர்ந்துகொண்டார் அவர்.

சிங்கப்பூரில் ஓரிரு நாட்களே இருக்கப்போவதாகவும், சாவகாசமாக வந்து சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க, ஆவலாய்க் காத்திருப்பதாகவும் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் சொன்னார், 52 வயது ஆமிர் கான்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்