Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

வசூல் சாதனையை நோக்கி அவெஞ்சர்ஸ் திரைப்படம்

திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களான டிஸ்னியும், மார்வெல்ஸ்சும் இனைந்து தயாரித்த படம்தான் அவெஞ்சர்ஸ்:இன்ஃபினிட்டி வார்.

வாசிப்புநேரம் -
வசூல் சாதனையை நோக்கி அவெஞ்சர்ஸ் திரைப்படம்

படம்: REUTERS/Mario Anzuoni

திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களான டிஸ்னியும், மார்வெல்ஸ்சும் இனைந்து தயாரித்த படம்தான் அவெஞ்சர்ஸ்:இன்ஃபினிட்டி வார்.

கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன், அயன் மேன், ஹல்க் என பல நட்சத்திரக் கதாபாத்திரங்களைக் கொண்ட அந்தப்படம் மூன்று  வாரங்களுக்குமுன் வெளியிடப்பட்டது.

படம் வெளியான பதினொரு நாட்களில் அது 1 பில்லியன் டாலர் வசூலை அள்ளித்தந்தது. குறைந்த நாட்களில் பில்லியன் டாலர் வசூலை படைத்திருக்கும் முதல் படம் இதுவே.

திரைப்படத்தின் கதை ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலும் காட்சியமைப்புகள் பிரமாண்டமான முறையில் இருந்ததாலும் அது வெற்றிபெற்றது.

சீனாவில் படம் இன்னும் திரையிடப்படவில்லை. இரண்டாம்  வாரயிறுதியில் அந்தப்படம் 112.5 மில்லியன் டாலர் வசூலைக் குவித்தது.

படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் அது இன்னும் அதிக வசூல் சாதனைகளைப் படைக்கவும் வாய்ப்புள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்