Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

புதிய சாதனையை நோக்கி 'Avengers: Endgame' திரைப்படம்

மற்ற சந்தைகளைவிட ஆசியச் சந்தையில் Avengers: Endgame' திரைப்படம் பெரும் தொகையை ஈட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
புதிய சாதனையை நோக்கி 'Avengers: Endgame' திரைப்படம்

(படம்: Reuters)

மார்வெல் ஸ்டுடியோஸின் 'Avengers: Endgame' திரைப்படம் தற்போது புதிய சாதனையை நோக்கி முன்னேறிவருகிறது.

தற்போதைய நிலவரப்படி திரைப்படம் உலக அளவில் 2.32 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாகவும், இந்த வார இறுதியின் முடிவில் அது 2.5 பில்லியனாக உயரும் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அப்படி, வரும் வாரங்களில் திரைப்படம் தொடர்ந்து வசூலைக் குவித்தால் அது முதலிடத்தில் இருக்கும் Avatar திரைப்படத்தை (2.7 பில்லியன் டாலர்) பின்னுக்குத் தள்ளும்.

(படம்:Alberto E. Rodriguez / GETTY IMAGES NORTH AMERICA / AFP)

மற்ற சந்தைகளைவிட ஆசியச் சந்தையில் Avengers: Endgame' திரைப்படம் பெரும் தொகையை ஈட்டியுள்ளது.

சீனாவில் மட்டும் அது 600 மில்லியன் டாலர் வசூலைப் பெற்றதாக Forbes சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் கிட்டத்தட்ட 338 கோடி (50 மில்லியன் டாலர்)
வசூலை அள்ளியுள்ளது திரைப்படம்.

'Avengers: Endgame' ஏப்ரல் 24ஆம் தேதி சில நாடுகளிலும், ஏப்ரல் 26ஆம் தேதி உலக அளவிலும் வெளியானது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்