Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

1960களின் புகழ்பெற்ற பேட்மேன் (Batman) காலமானார்

1960களில் தொலைக்காட்சித் தொடரில் பேட்மேனாக (Bat Man) நடித்துப் புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ஆடம் வெஸ்ட் காலமானார்.

வாசிப்புநேரம் -
1960களின் புகழ்பெற்ற பேட்மேன் (Batman) காலமானார்

(படம்: Reuters)

1960களில் தொலைக்காட்சித் தொடரில் பேட்மேனாக (Bat Man) நடித்துப் புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ஆடம் வெஸ்ட் காலமானார்.

அவருக்கு வயது 88.

சிறிது காலமாக அவர் ரத்தப் புற்றுநோயை எதிர்த்துப் போராடியதாக திரு. வெஸ்ட்டின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தங்கள் தந்தை இருந்தபோதும், இறந்தபோதும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான கதாநாயகன் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

நடிப்புத்துறைக்கு வருமுன்னர் திரு. வெஸ்ட், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார். அமெரிக்கப் படையினருக்கான ஒலிபரப்புக் கட்டமைப்பில் அவர் அறிவிப்பாளராக இருந்தார்.

திரு. ஆடம் வெஸ்ட்டுக்கு, உடன் பணியாற்றியவர்கள், அவருக்குப் பிறகு பேட்மேன் வேடத்தை ஏற்று நடித்தவர்கள், ரசிகர்கள் எனப் பலதரப்பினரும் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்