Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

'காலா' திரைப்பட முன்னோட்டம் : 4.9 மில்லியன் முறை பார்க்கப்பட்டதா?

"காலா" படத்தில் வரும் ரஜினி கதாபாத்திரத்தின் கேலிச்சித்திர உருவத்தைக் கொண்ட சுவரொட்டிகள், டீ-சட்டைகள், குவளைகள், கைப்பேசி, மடிக்கணினி உறைகள் என பல பொருட்களை ரஜினி ரசிகர்கள் coveritup இணையப்பக்கத்தின்மூலம் வாங்கலாம்.

வாசிப்புநேரம் -
'காலா' திரைப்பட முன்னோட்டம் : 4.9 மில்லியன் முறை பார்க்கப்பட்டதா?

(படம்: coveritup)

Youtubeஇல் தற்போது ஆகப் பிரபலமான காணொளி காலா திரைப்படத்தின் முன்னோட்டம். திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் பிலிம்ஸ் திங்கட்கிழமை ( மே 28) அதை வெளியிட்டது.

இரண்டே நாட்களில் சுமார் 4.8 மில்லியன் பேர் அதைப் பார்த்துள்ளனர். 2016இல் வெளியான "கபாலி" படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் இசையமைப்பாளர், சந்தோஷ் நாராயணன் இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் இந்தப் படம் ஜூன் 7ஆம் தேதி திரைக்கு வரும் என்று ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரஜினி ரசிகர்களுக்காக சிறப்பு "காலா" விளம்பரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

(படம்: coveritup)

"காலா" படத்தில் வரும் ரஜினி கதாபாத்திரத்தின் கேலிச்சித்திர உருவத்தைக் கொண்ட சுவரொட்டிகள், டீ-சட்டைகள், குவளைகள், கைப்பேசி, மடிக்கணினி உறைகள் எனப் பல பொருட்கள் இணையத்தில் விற்பனையாகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்