Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கருத்துச் சொல்லும் அளவிற்கு எனக்குத் தகுதியில்லை - ஷாருக் கான்

இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக் கான், பலாத்காரம் பற்றி சக நடிகர் சல்மான் கான் பேசியது குறித்துக் கருத்துரைக்கத் தமக்குத் தகுதியில்லை என்று கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
கருத்துச் சொல்லும் அளவிற்கு எனக்குத் தகுதியில்லை - ஷாருக் கான்

(படம்: ANI)

இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக் கான், பலாத்காரம் பற்றி சக நடிகர் சல்மான் கான் பேசியது குறித்துக் கருத்துரைக்கத் தமக்குத் தகுதியில்லை என்று கூறியிருக்கிறார்.

சல்மான் கான் தனது கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமா என்று வினவப்பட்ட போது ஷாருக் அவ்வாறு கூறினார். தாமே முன்பு பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளதால் மற்றவர்கள் பேசியது பற்றித் தாம் விமர்சிக்கக் கூடாது என்று ஷாருக் குறிப்பிட்டார்.

கங்கனா ரனாவட், அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், சோனா மொஹபாட்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள், சல்மானின் கருத்துக்கள் குறித்துக் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ், சோனு சூட், சுபாஷ் காய் உள்ளிட்டோர் அவரைத் தற்காத்துப் பேசியுள்ளனர்.

யார் பக்கம் பேசுவது அல்லது பேசாமல் இருப்பது என்பது பிரச்சினையில்லை. ஏதாவது செய்ய விரும்புவோர் அவரவர் சொந்தமாக முடிவெடுத்துக் கொள்வது நல்லது என்று ஷாருக் கான் கூறினார்.

சல்மான், தனது எதிர்வரும் படமான "சுல்தான்" குறித்து வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படத்தில் நடித்த பிறகு, தான் பலாத்காரம் செய்யப்பட்டதைப் போல் உணர்ந்ததாக சல்மான் கூறினார்.

மகளிருக்கான தேசிய ஆணையம் ஜூலை 8-ஆம் தேதி சல்மான் விசாரணைக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்