Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கோஹிநூர் வைரம் - இந்திய அமைச்சர்கள் கூட்டம்

புகழ்பெற்ற கோஹிநூர் வைரத்தை பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவருவது குறித்து கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கலாசார அமைச்சர் மகேஷ் ஷர்மா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வாசிப்புநேரம் -
கோஹிநூர் வைரம் - இந்திய அமைச்சர்கள் கூட்டம்

கிரீடத்தினுள் பொருத்தப்பட்டிருக்கும் கோஹிநூர் வைரம். (படம்: Reuters)

புதுடில்லி, இந்தியா: புகழ்பெற்ற கோஹிநூர் வைரத்தை பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவருவது குறித்து கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கலாசார அமைச்சர் மகேஷ் ஷர்மா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

108 கேரட் கோஹிநூர் வைரம், தற்போது லண்டன் கோபுர அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கிரீடத்தினுள் பொருத்தப்பட்டிருக்கிறது. 200 மில்லியன் டாலர் மதிப்புள்ளது அந்த வைரம். 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோஹிநூர் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோஹிநூர் வைரத்தின் மீது 4 நாடுகள் தற்போது உரிமை கோருகின்றன. பிரிட்டனுடனான அந்தச் சர்ச்சையைத் தீர்க்க இந்தியா பல வழிகளை ஆரய்வதாகத் திரு ஷர்மா மே மாதத்தில் இந்திய நடாளுமன்றத்திடம் தெரிவித்தார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்