Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

கலையுலகம்

விலங்குகளைப் பாதுகாப்பது வீட்டிலேயே தொடங்குகிறது

உலகைப் பாதுகாக்கவேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், நாம் வீட்டிலேயே சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பல அம்சங்கள் இருக்கின்றன.

வாசிப்புநேரம் -
விலங்குகளைப் பாதுகாப்பது வீட்டிலேயே தொடங்குகிறது

(படம்: Jasper Loh/CNA)


உலகைப் பாதுகாக்கவேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு உண்டு.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது, தண்ணீரையும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்துவது போன்ற சுற்றுப்புறத்துக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஆனால், நாம் வீட்டிலேயே சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பல அம்சங்கள் இருக்கின்றன.

1. சுவர்களுக்கு இயற்கைச் சாயம்

(படம்: Unsplash/David Pisnoy)


2. பட்டு, பறவை இறகைத் தவிர்ப்பது

தலையணை, போர்வை பொசுபொசுவென இருக்க பறவையின் இறகு பயன்படுத்தப்படுகிறது. அவை பட்டுத் துணியில் அடைக்கப்படுகின்றன. பறவைகளின் தோலோடு ஒட்டியிருக்கும் இறகுகளைப் பிடுங்கி அத்தகைய மிருதுவான தலையணை, போர்வைகள் தயாரிக்கப்படுகின்றன. பட்டை எடுத்துக்கொண்டால், பட்டு நூலைத் தயாரிக்க எண்ணிலடங்கா பட்டுப்புழுக்கள் அவற்றின் கூட்டுடன் வெந்நீரில் கொதிக்க வைக்கப்படுகின்றன. பட்டு, பறவை இறகு போன்றவற்றுக்குப் பதிலாக, பருத்தித் துணிகளையும் மூங்கில் பட்டையும் பயன்படுத்தலாமே...

3. தேன்மெழுகு மெழுகுவர்த்திக்குப் பதிலாக சோயா மெழுகுவர்த்தி

(படம்: Unsplash/Hans Vivek)

பெரும்பாலும் மெழுகுவர்த்திகள் தேன்மெழுகைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தேன் கூடுகள் வெந்நீரில் கொதிக்கவிடப்படுகின்றன. அதனால் larvae எனும் நுண்புழுக்கள் உட்கொள்வதற்குத் தேன் கூடுகள் இருக்க மாட்டா. அதனால், இளம் தேனீக்களுக்கு ஊட்டச்சத்து குறைகிறது. இதையெல்லாம் தவிர்க்க, சோயா மெழுகுவர்த்தியை நாம் பயன்படுத்தலாம். தேன்மெழுகு மெழுகுவர்த்தியைக் காட்டிலும் சோயா மெழுகுவர்த்தி எரியும் நேரமும் அதிகம்.

4. சுற்றுப்புறத்துக்கு உகந்த சுத்தம் செய்யும் பொருள்களைத் தெரிவுசெய்வது

வீட்டைச் சுத்தம் செய்யும் சலவைத்தூள், சவர்க்காரம் போன்ற பல பொருள்களைத் தயாரிக்க விலங்குகள் மீது சோதனை மேற்கொள்ளப்படுவதுண்டு. ஆகையால் அடுத்த முறை, வீட்டைச் சுத்தம் செய்யும் பொருள்களை வாங்கும் முன்னர், அவை விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டவையா என்பதைப் பார்த்து வாங்கலாம்.
Baking soda, வினிகர் போன்றவற்றைக் கொண்டும் வீட்டைச் சுத்தப்படுத்தலாம்.


5. நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வகையில் பெறப்படும் மரப்பலகையால் செய்யப்படும் அறைகலனை நாடலாம்

(படம்: Unsplash/Yasmine Boheas)

கண்மூடித்தனமாக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதால் உலக வெப்பநிலை அதிகரிக்கிறது. வனவிலங்குகள் வசிப்பிடமின்றி அலைய நேர்கிறது. இதனைத் தவிர்க்க, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வகையில் பெறப்படும் மரப்பலகைகளைக் கொண்டு செய்யப்படும் அறைகலனை நாம் நாடலாம். கருங்காலி மரம், மூங்கில் போன்றவற்றின் பலகை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பெறப்படுகின்றன. அவற்றை எளிதில் வளர்க்கமுடியும். அடுத்த முறை, வீட்டின் தரைக்கும் அறைகலனுக்கும் அத்தகைய மரப்பலகைகளை நாடலாமே...

6. தோலால் செய்யப்பட்ட நாற்காலி வேண்டாம்

மாடு, பன்றி ஆகிய விலங்குகள் அவற்றின் தோல், மாமிசத்துக்காகக் கொல்லப்படுகின்றன. அந்தத் தோலைக் கொண்டு நாற்காலி, சொகுசு இருக்கை (Sofa) போன்ற தோல் பொருள்கள் செய்யப்படுகின்றன. அதற்குப் பதிலாகப் பொய்த் தோலால் செய்யப்பட்டவற்றை நாடலாமே... அவை உண்மையான விலங்குத் தோலால் செய்யப்பட்ட பொருள்களைவிட மேலும் மலிவானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்