Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் 47 பேர் மீட்பு

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் குழந்தைத் தொழிலாளர்கள் 47 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் குழந்தைத் தொழிலாளர்கள் 47 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

இனிப்புத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த அவர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மீட்டது.

ஜெயா உணவுப் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த 17 சிறுவர்களும், 30 சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.

முஸ்கன் என்னும் அரசு சாரா தொண்டூழிய அமைப்பின் உதவியோடு அவர்கள் மீட்கப்பட்டனர். 

ஒவ்வொரு நாளும், 180 ரூபாய் சம்பளத்தில் அந்தப் பிள்ளைகள் 12 மணி நேர உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

அவர்கள், தமிழ்நாட்டையும் ஆந்திரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். 

ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த அவர்கள், குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் நோக்கில் வேலைக்கு வந்ததாகக் கூறினர்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனிப்புத் தொழிற்சாலை முதலாளி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

அந்தத் தொழிற்சாலை வளாகமும் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. 

சட்டபூர்வத் தடை இருந்தாலும் இந்தியாவில் 5.7 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்