Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஹரித்வாரில் திருவள்ளுவருக்கு இடமில்லை

ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அச்சிலை நிறுவப்படவில்லை.

வாசிப்புநேரம் -
ஹரித்வாரில் திருவள்ளுவருக்கு இடமில்லை

திருவள்ளுவர் சிலை.

ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அச்சிலை நிறுவப்படவில்லை. பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினரும் திருவள்ளுவரின் தீவிர ரசிகருமான தருண் விஜய், சிலைக்கான நிலத்தைப் பெறும் முயற்சியில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அச்சிலை எழுப்பப்படாமல் ஒரு புறம் சாய்ந்தவண்ணம் கிடக்கிறது.

12 அடி உயரமுள்ள அச்சிலை கல்லால் செய்யப்பட்டது.

ஹரித்வாரின் ஹர் கி பவுரி நகரில் உள்ள கங்கா நதிப் பகுதியில் அந்தச் சிலையை நிறுவ தருண் விஜய் முதலில் திட்டமிட்டார். ஆனால் அப்பகுதி புரோகிதர்கள் அச்சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ஹரித்வார் மாவட்ட அரசு, சங்கராச்சாரிய சவ்க் என்ற இடத்தைப் பரிந்துரைத்தது.

அங்கும் எதிர்ப்புகள் எழுந்தன.

"திருவள்ளுவருக்கும் ஹரித்வாருக்கும் என்ன தொடர்பு ? ஹரித்வாரில் திருவள்ளுவரைப் பற்றி

யாருக்குத் தெரியும்?" என்று துவாரகை சங்கர பீடாதிபதி வினவினார்.

திருவள்ளுவர் கங்கா பயணம் என்ற திட்டத்தின் இறுதிக் கட்டமாக ஹரித்வாரில் அவர் சிலையை நிறுவும் முயற்சிக்கு முட்டுப்பாடுகள் ஏற்படுவது குறித்து வருத்தமாக இருப்பதாகத் திரு தருண் விஜய் தி இந்து செய்தியாளரிடம் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்