Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

காணாமல் போன இந்திய ஆகாயப்படை விமானம் - தொடர்கிறது தேடல்

காணாமல் போன இந்திய ஆகாயப்படை விமானத்திற்கான தேடல் பணிகளின் போது, வங்காள விரிகுடாவில் எந்தச் சிதைவுகளும் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாசிப்புநேரம் -
காணாமல் போன இந்திய ஆகாயப்படை விமானம் - தொடர்கிறது தேடல்

(படம்: Reuters)

புதுடில்லி, இந்தியா: காணாமல் போன இந்திய ஆகாயப்படை விமானத்திற்கான தேடல் பணிகளின் போது, வங்காள விரிகுடாவில் எந்தச் சிதைவுகளும் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையிலிருந்து போர்ட் பிளேருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 29 பேர் இருந்தனர். வங்காள விரிகுடாவில் கடந்த இரு நாட்களாக மோசமான வானிலை நிலவி வந்ததாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.

4 விமானங்கள், 12 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை தேடல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகத் தற்காப்பு அமைச்சு சொன்னது.

விமானம் பறந்துகொண்டிருக்கையில் அதன் உயரம் சில நேரத்தில் வெகுவாகக் குறைந்ததாக ராடார் கருவியின் மூலம் அறிந்ததாக அதிகாரிகள் கூறினர். அத்துடன் விமானத்தில் 3 சிறிய கோளாறுகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்