Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிள்ளைத் தொழிலாளர்கள் - சர்ச்சைக்குரிய சட்டம் அமலாக்கம்

இந்தியாவில், பிள்ளைகள் வேலை செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 14 வயதுக்குக் குறைவான பிள்ளைகள், வேலை செய்வதை அந்தச் சட்டம் தடைசெய்கிறது.

வாசிப்புநேரம் -

புதுடில்லி, இந்தியா: இந்தியாவில், பிள்ளைகள் வேலை செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 14 வயதுக்குக் குறைவான பிள்ளைகள், வேலை செய்வதை அந்தச் சட்டம் தடைசெய்கிறது. இருப்பினும், 14 வயதுக்குக் குறைவான பிள்ளைகள், தங்கள் குடும்பத் தொழில், அல்லது விளையாட்டுத் துறை, அல்லது, கேளிக்கைத் துறையில் ஈடுபடுவதற்கு அந்தச் சட்டம் இடம் அளிக்கிறது.

பிள்ளைகள் தங்கள் குடும்பத் தொழில்களில் ஈடுபட்டால், அது அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி-வருகின்றனர். பள்ளி நேரத்துக்குப் பிறகோ, விடுமுறையின்போதோ, பிள்ளைகள், குடும்பத் தொழியில் ஈடபட அனுமதிக்கப்படுவதால், அவர்கள் பாரம்பரிய தொழில்களைக் கற்றுக்கொள்ள உதவும் என்று அரசாங்கம் தனது முடிவைத் தற்காத்து பேசியிருக்கிறது.

இருப்பினும், அத்தகைய ஏற்பாட்டால், ஏழ்மையில் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், மேலும் பின்தங்கிவிடலாம் என்று UNICEF எனும், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பிள்ளைகளுக்கான அவசர நிதி அமைப்பு கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்