Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தங்கக் கட்டிகளாக உருவெடுக்கும் திருப்பதி கோவில் நன்கொடைகள்

இந்தியாவில் அதிக செல்வச்சிறப்புடைய கோவில் திருப்பதி. ஆண்டுதோறும் திரளாக வரும் பக்தர்கள் வழங்கும் உண்டியல் நன்கொடையில் கோவில் கோடிக்கணக்காக வசூல் திரட்டுகிறது என்பது வியக்கத்தக்கது அல்ல.

வாசிப்புநேரம் -
தங்கக் கட்டிகளாக உருவெடுக்கும் திருப்பதி கோவில் நன்கொடைகள்

திருப்பதி கோவில். (படம்: The Hindu)

இந்தியா: இந்தியாவில் அதிக செல்வச்சிறப்புடைய கோவில் திருப்பதி. ஆண்டுதோறும் திரளாக வரும் பக்தர்கள் வழங்கும் உண்டியல் நன்கொடையில் கோவில் கோடிக்கணக்காக வசூல் திரட்டுகிறது என்பது வியக்கத்தக்கது அல்ல.

இந்த நன்கொடையில் தங்க நகைகளும் அடங்கும். பல்லாண்டு காலமாக கோவில் இருப்புகளில் பாதுகாக்கப்பட்டு வரும் தங்கத்தை பொருளாதாரத்திற்கு வெளியிட வேண்டும் என இந்திய அரசாங்கம் விரும்புகிறது.

அதனால் திருப்பதி கோவில் தரும் தங்கத்திற்கு அரசாங்கம் வட்டி வழங்குகிறது. ஒப்படைக்கப்படும் தங்கம் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் நகைக்கடை உரிமையாளர்கள்.

இவ்வாறு வாங்குவதால் நகைக்கடைக்காரர்கள் வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யவேண்டிய தேவை குறைகிறது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவினமும் குறைகிறது. இப்போது வாடிக்கையாளர்கள் தங்களது ஆசை நகைகளை வாங்குவதற்கு மேலும் ஒரு காரணம்.


(நன்றி: BBC தமிழ்)
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்