Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

டெல்லியில் கடும் மழையினால் சாலைகளில் நீர் தேக்கம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ந்தியத் தலைநகர் டெல்லியில் பெய்த கடும் மழை, நகரத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
டெல்லியில் கடும் மழையினால் சாலைகளில் நீர் தேக்கம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சாலையோர பழ விற்பனையாளர். (படம்: Reuters)

இந்தியா: இந்தியத் தலைநகர் டெல்லியில் பெய்த கடும் மழை, நகரத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராமல் பெய்த கன மழையால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆறு மணி நேரம் பெய்த மழையில், சாதனை அளவாக 82 மில்லிமீட்டர் அளவு மழை பெய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அது மாதந்தோறும் பெய்யக்கூடிய சராசரி அளவு மழையைக் காட்டிலும் அதிகமானது.

கன மழையைத் தொடர்ந்து, டெல்லி போக்குவரத்துப் போலீஸ்-க்கு வந்த புகார்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானவை, சாலை நீர் தேங்கி இருப்பது தொடர்பானதே ஆகும்.

டெல்லி தவிர, மற்ற மாநிலங்களும் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

த்தியப் பிரதேச மாநிலத்தில் பெய்த கடும் மழையில், குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். அங்கு 70 ஆயிரம் வீடுகளை இழந்து சிரமப்படுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்