Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பொருள்-சேவை வரிக்கான மசோதாவை நிறைவேற்ற முயலும் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பொருள்-சேவை வரிக்கான மசோதாவை நிறைவேற்றிட, பல்வேறு கட்சிகளின் ஆதரவு தேவை என்று கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பொருள்-சேவை வரிக்கான மசோதாவை நிறைவேற்ற முயலும் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (படம்: Reuters)

இந்தியா: இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பொருள்-சேவை வரிக்கான மசோதாவை நிறைவேற்றிட, பல்வேறு கட்சிகளின் ஆதரவு தேவை என்று கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அந்த மசோதாவை நிறைவேற்றிட அவர் அந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பொருள்-சேவை வரி மசோதாவை நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றிட மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது.

மசோதாவில் உள்ள சில முக்கியப் பிரிவுகளில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் கொண்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மக்களின் பிரதிநிதியாகவும், கட்சியின் பிரதிநிதியாகவும் இருக்கும் நாம், நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்; பொருள்-சேவை வரி மசோதாவை அறிமுகம் செய்தது யார் என உரிமை கொண்டாடுவது முக்கியமல்ல என்று திரு. மோடி சொன்னார்.

அந்த மசோதவை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள்தான் முக்கியம் என்று கூறிய திரு. மோடி, அதனை நிறைவேறுவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென்றார்.

தேச நலனைவிட வேறு எதுவும் பெரியது அல்ல என்பதை மனத்தில் கொண்டு மசோதாவை நிறைவேற்ற உதவ வேண்டும் என்றார் திரு. மோடி. பொருள், சேவை வரி மசோதா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்டது.

இருப்பினும் அது சட்டமாக, மேலவையின் அங்கீகாரம் தேவை. அங்கு பாரதீய ஜனதாவுக்குப் போதுமான இடங்கள் இல்லாததால், அதைச் சட்டமாக்க முடியாமல் திரு. மோடியின் அரசு திணறி வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்