Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி காலமானார்

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி கபூர் காலமானார். அவருக்கு வயது 54. துபாயில் குடும்பத் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது, அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

வாசிப்புநேரம் -
பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி காலமானார்

படம்: Reuters

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி கபூர் காலமானார். அவருக்கு வயது 54. துபாயில் குடும்பத் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது, அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நான்கு வயதிலிருந்து அவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் பணியாற்றி வந்தார். 50 ஆண்டுகளில், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அவருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.

அவரின் மறைவிற்குத் திரை உலகத்தைச் சார்ந்த பலரும் சமூக ஊடகங்களில் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்