Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அப்துல் கலாமுக்கு சிலை எழுப்ப உலாமா அமைப்பு எதிர்ப்பு

மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை எழுப்புவதற்கு ஜமாத்துல் உலாமா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
அப்துல் கலாமுக்கு சிலை எழுப்ப உலாமா அமைப்பு எதிர்ப்பு

மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்(படம்: Manjunath Kiran/AFP/Getty Images)

மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை எழுப்புவதற்கு ஜமாத்துல் உலாமா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிலை எழுப்புவது முஸ்லிம் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது என்று அது கூறியது.

இஸ்லாம் விக்கிரக ஆராதனைக்கும், தனிநபர் வழிபாட்டுக்கும் அனுமதியளிக்காது.

திரு. கலாமின் உபதேசங்களின் படி நடப்பதே அவருக்கு செய்யும் மரியாதை என்று கூறிய அந்த அமைப்பினர், தங்கள் கருத்தைக் கலாம் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினர். 

இருப்பினும், நாளை மறு நாள் சிலைதிறப்பின் போது எந்தவித இடையூறும் செய்யமாட்டோம் என்று அவர்கள் உறுதியளித்தனர்.

திரு. கலாமின் நினைவிடத்தில் 7 அடி உயரச் சிலை அமைப்பதற்கான பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதாகக் கூறப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்