1. விண்ணப்பம் செய்வதில் சந்தேகங்கள் இருந்தால் என்ன செய்வது? பதில்: செய்தி இணையப்பக்கத்தில் வெளிவரவிருக்கும் காணொளியில் விண்ணப்பம் செய்யும் செயல்முறை குறித்து நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
 2. விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யலாமா?
  பதில்: தமிழில் தட்டச்சு செய்தால் நல்லது. முடியவில்லை என்றால், ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யலாம்.
 3. எனது தந்தை, தாய், சகோதரர், சகோதரி, உற்றார், உறவினர் ஆகியோரில் ஒருவரை நான் முன்மொழிய முடியுமா?
  பதில்: முடியும். தகுதியுடையவர் என்று நினைக்கும் எவரையும் நீங்கள் முன்மொழியலாம்.
 4. விருதுக்கான தகுதிகளில் குறிப்பிட வேண்டிய அம்சங்கள் அதிகம் இருந்தால் (250 வார்த்தைகளைத் தாண்டி) தனிப்பட்ட படிவத்தை இணைக்கலாமா?
  பதில்: தேவையில்லை. முக்கியமான சாதனைகளை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிடவும். சம்பந்தப்பட்ட இணையப்பக்க முகவரிகளைக் கொடுக்கவும். மேல் விவரங்கள் தேவைப்பட்டால், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.
 5. விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, ஏதேனும் தகவல்கள் விடுபட்டுப்போயிருந்தால் அவற்றை அனுப்பலாமா?
  பதில் : விடுபட்ட தகவல்களை இணைத்து 2017 அக்டோபர் 31ஆம் தேதிக்குள் மீண்டும் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். ஒரு முறை மட்டுமே அவ்வாறு மீண்டும் சமர்ப்பிக்க முடியும்.
 6. விருதுக்குத் தகுதிபெறுவோரைத் தேர்ந்தெடுப்பவர்கள் யாவர்?
  பதில்: விருதுக்குத் தகுதி பெறுவோரை முதலில் எங்கள் செய்திப் பிரிவின் மூத்த செய்தியாசிரியர்கள் தேர்ந்தெடுப்பர். அவர்களிலிருந்து ஒவ்வொரு பிரிவுக்கும் மூவர் அல்லது மூன்று குழுவினர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின் துறை சார்ந்த வல்லுநர்கள் விருது பெறும் இறுதி நபர் / குழுவைத் தேர்ந்தெடுப்பர்.
 7. 2015 செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் நான் மேற்கொண்ட பணிகளைப் பட்டியலிடலாமா?
  பதில்: சிறு குறிப்பாக அளிக்கலாம். ஆனால் அக்டோபர் 2015-க்கும் செப்டம்பர் 2017-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆற்றிய பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். (வாழ்நாள் சாதனையாளர் பிரிவுக்கு இது பொருந்தாது)
 8. ஒருவர் ஒரு பிரிவில் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியுமா?
  பதில்: இல்லை. ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளுக்குத் தகுதி பெற்றிருந்தால், அவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம்.
 9. குழுவாக விண்ணப்பம் செய்யும் பிரிவுகளில், அதிகபட்சம் எத்தனை உறுப்பினர்கள் இருக்கலாம்?
  பதில்: உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு வரைமுறை இல்லை. குழுப் போட்டியில் விருது, அமைப்புக்கே வழங்கப்படும்.
 10. மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, படைப்புகள் ஒருமுறை பயன்படுத்தக்கூடியவையாக இருந்தால் போதுமா தொடர்-பயன்பாட்டில் இருக்கவேண்டும் என்பது அவசியமா?
  பதில்: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய படைப்பாகவும் இருக்கலாம், தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடிய படைப்பாகவும் இருக்கலாம். அது எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கிறது என்ற தகவல் இருந்தால், அதையும் குறிப்பிடலாம்.
 11. மின்னிலக்கத் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி அமைப்புகள் விண்ணப்பம் செய்யமுடியுமா?
  பதில்: விண்ணப்பம் செய்யலாம்.
 12. மின்னணு முறைக் கற்றல் உதவிக் குறிப்புகள் என்றால் என்ன?
  பதில்: கற்றல், கற்பித்தலுக்கு உதவக்கூடிய தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களைக் குறிப்பிடலாம்.