Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் உலகளாவிய இரத்தப் பரிசோதனை முயற்சியில் முக்கிய முன்னேற்றம்

புற்றுநோயை அடையாளம் காண்பதற்கு புதிய உலகளாவிய இரத்தப் பரிசோதனை முறையை உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

வாசிப்புநேரம் -

புற்றுநோயை அடையாளம் காண்பதற்கு புதிய உலகளாவிய இரத்தப் பரிசோதனை முறையை உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் 1,000 பேரிடம் இந்த இரத்தப் பரிசோதனை முறையைச் சோதித்துப் பார்த்துள்ளது.

கருப்பை, கல்லீரல், வயிறு, கணையம், உணவுக்குழாய், பெருங்குடல், நுரையீரல், மார்பகம் ஆகிய எட்டுவிதமான புற்றுநோய்களைத் தற்போது இந்த ஓர் இரத்தப் பரிசோதனையில் பெரும்பாலும் அடையாளம் காண முடிகிறது.

பரிசோதனையின் வெற்றி விகிதம் 77 விழுக்காடு.

CancerSEEK என்று அழைக்கப்படும் இந்த இரத்தப் பரிசோதனைக்கான கட்டணம் சுமார் 500 டாலர்.

சிங்கப்பூரில் மானியத்தோடு செய்யப்படும் பெருங்குடல் புற்றுநோய்ச் சோதனைக்கான கட்டணத்தைக் காட்டிலும் அது குறைவு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்