Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நெருக்கடியில் அதிகமாகச் சாப்பிடுவது - நரம்பணு காரணம்

ஏதேனும் நெருக்கடியில் இருக்கும்போது பீட்ஸா, பிரியாணி, சாக்லெட் போன்ற பதார்த்தங்களைச் சாப்பிடவேண்டும் என்ற வேட்கை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?

வாசிப்புநேரம் -

ஏதேனும் நெருக்கடியில் இருக்கும்போது பீட்ஸா, பிரியாணி, சாக்லெட் போன்ற பதார்த்தங்களைச் சாப்பிடவேண்டும் என்ற வேட்கை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?

நம் உடலில் உள்ள neuron எனப்படும் நரம்பணு அதற்குக் காரணம் என்று கூறுகிறது ஓர் ஆய்வு.

புறச் சூழலால் உருவாகும் மன உளைச்சல் அந்த நரம்பணுக்களைச் தூண்டிவிட்டுப் பசி அதிகரிக்கும்.

ஜப்பானில், மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஆய்வு நிலையத்தில் ஆய்வாளர்கள் எலிகளை ஆராய்ந்து இதனைக் கண்டுபிடித்தனர்.

நரம்பணுக்களைத் தூண்டிவிடும்போது, வழக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலான உணவை, அந்த எலிகள் சாப்பிடுவது தெரியவந்தது.

கொழுப்புச் சத்து மிகுந்த உணவை உட்கொள்வது கிட்டத்தட்ட பாதி குறைந்ததும் ஆய்வில் தெரியவந்தது.

உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவைச் சாப்பிடும் பழக்கத்தை முறியடிக்க, இந்த ஆய்வு உதவக் கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்